மக்கள் செல்வனின் புதிய தோற்றம்.. வைரலாகும் புகைப்படம்...!

Friday, 17 July 2020 - 13:50

%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D..+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D...%21
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.

தற்போது இவர் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல படங்களில் விஜய் சேதுபதி நடித்துக்கொண்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்கள் என அனைத்திலும் தன் திறமையை நிரூபித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி.

அதேபோல் சமீபத்தில் இவரது டுவிட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனையும் கடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்காக ரசிகர்களுக்கு நன்றி சொல்லி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய்சேதுபதி.

இந்த புகைப்படம்  மாமனிதன் திரைப்படத்திற்கு தயாராகி வரும் விஜய் சேதுபதியின் தோற்றம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த புகைப்படம் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.