அர்ஜூன் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி- அதிர்ச்சியில் திரையுலகம்

Tuesday, 21 July 2020 - 12:23

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
அர்ஜூனின் மகளுன் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அர்ஜூனின் மகளுன் நடிகையுமான ஐஸ்வர்யா, தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

சமீபத்தில் எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.