ஏ.ஆர்.ரகுமானை எதிர்க்கும் கூட்டம்....!

Sunday, 26 July 2020 - 14:30

%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D....%21
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் 'தில் பெச்சாரே' என்ற திரைப்படம் நேற்று வெளியானது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து அவர் நேர்காணல் ஒன்றும் வழங்கியிருந்தார்.

இதன்போது பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என தெரிவித்துள்ளார்.

அத்துடன், நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த நேர்காணலில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது 'தில் பெச்சாரா' படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார்.

இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன்,அப்போது அவர் என்னிடம் 'பலர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள் அவர்கள் ஏதேதோ கதைகளை சொல்கிறார்கள்' என்று கூறியுனார்  அப்போதுதான் எனக்கு புரிந்தது அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இந்த தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.