சென்னையை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ப்ரெண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், மீசையை முறுக்கு ஆகிய தமிழ் திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிக்கொணர்ந்தவர்தான் இந்த நடிகை.

விஜயலட்சுமி என அழைக்கப்படும் இவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரத்த அழுத்தத்திற்கான குளிசைகளை அதிகமாக உட்கொண்டு இவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
ஏற்கனவே தாம் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் நடிகர் சங்கம் உதவிபுரிய வேண்டும் எனவும் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இதன்போது சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிகை விஜயலட்சுமிக்கு உதவியளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டு குளிசைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
அடையாறு பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.