சுஷாந்த் சிங் இன் மரணத்தில் திடீர் திருப்பம்...!

Wednesday, 29 July 2020 - 16:10

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D...%21
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சினிமா துறையை சார்ந்த பலரிடம் இதுவரை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்சமயம் சுஷாந்த் சிங்கின் காதலி என அறியப்படும் ரியா என்பவர் மீது சுசாந் சிங்கின் தந்தை முறைப்பாடு அளித்துள்ளார்.

சுஷாந்த் சிங் மற்றும் ரியா ஆகியோர் காதலித்து வந்த நிலையில் ரியா தனது மகனை ஏமாற்றி 15 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாக தந்தை அழித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நடிகை ரியாவையும் அழைத்து விசாரணை செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது ரியா வேறு சிலருடன் இணைந்து சுசாந்த் சிங்கிடம் 15 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ரியா சுஷாந்த் சிங்கிற்கு பல மன அழுத்தங்களையும் கொடுக்கும் வகையில் செயற்ப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்கு தொடர்பில் நடிகை ரியாவுடன் சம்பந்தப்பட்ட மேலும் சிலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.