சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு நான் பொறுப்பல்ல-நடிகை ரியா

Friday, 31 July 2020 - 16:56

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட சிலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சுஷாந்தின் தந்தை, சுஷாந்தின் காதலி என அறியப்படும் நடிகை ரியா சக்ரவர்த்தி மீது முறைப்பாடு அளித்திருந்தார்.

ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் சுஷாந்தை ஏமாற்றியதாகவும், மன ரீதியாக துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவர் முன்வைத்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தன் மீதான புகாரை பாட்னாவிலிருந்து மும்பைக்கு மாற்றுமாறு கோரி நடிகை ரியா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் தான் சுஷாந்துடன் கடந்த ஓராண்டு காலமாக லிவ்விங்-டூ-கெதராக ஜுன் 8 ஆம் திகதி வரை வாழ்ந்ததாகவும், அதன்பின் அவரது வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தான் வெளியேறியமைக்கு இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், சுசாந்தின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாகவே தான் அவரை விட்டு பிரிந்ததாகவும் ரியா மேலும் கூறியுள்ளார்.

ஆனால்,பிரிந்ததில் இருந்து நான் ஒருபோதும் சுசாந்தை பார்க்க செல்லவில்லை என்றும் அவரிடம் பணம் கேட்டு அவருக்கு தொல்லை கொடுக்கவில்லை எனவும் ரியா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.