10 படுக்கைகளை கொண்ட ICU மேம்பாட்டு திட்டம் - டயலொக் ஆசி ஆட்டா

Friday, 31 July 2020 - 17:22

10++%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+ICU+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE
டயலொக் ஆசி ஆட்டா ஹோமாகம அடிப்படைமருத்துவமனையில் 10  படுக்கைகளை கொண்ட ICU மேம்பாட்டு திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் ஒரு முழுமையான செயல்பாட்டுடன் கூடிய ICU இனை (தீவிரசிகிச்சைபிரிவு) நிறுவ அனைத்து உபகரணங்களையும் வழங்கி உடனடி கட்டுமான பணிகளைத் தொடங்கியுள்ளது.

இச்செயற்றிட்டமானது சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சகத்தினால் (ஆழுர்) தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவசரமாக தேவைப்படும் ICU திறன் மேம்பாட்டிற்கு சமீபத்தில் உறுதியளித்த ரூ.2000 இலட்சத்திற்கான உறுதிமொழிக்கு அமைய இரண்டாம் கட்ட செயற்பாடாக அமைந்துள்ளதுடன் முழுமையான நிதியுதவியானது டயலொக் ஆசிஆட்டாவினால் வழங்கப்பட்டுள்ளது.

ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் கட்டுமான பணிகள் மற்றும் முக்கியமான ICU மேம்பாடு, 10 புதிய படுக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில் ஒரு முழுமையான செயல்பாட்டுடன் கூடிய ICU வளாகமானது நிறுவப்பட்டு அதிநவீனமருத்துவ உபகரணங்களுடன் முழுமையாக நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையின் திறனை மேம்படுத்துகிறது.

கோவிட் - 19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நியமிக்கப்பட்ட 18 மருத்துவமனைகளில் ஒன்றான ஹோமாகம அடிப்படை மருத்துவமனை ஆண்டு தோறும் 400,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றது.  மருத்துவமனையின் முக்கியமான பராமரிப்பு வசதிகளை அதிகரிப்பதன் மூலம், அனுமதிக்கப்பட்ட முக்கியமான நோயாளிகள் உயிர் வாழ்வதற்கான அதிக வாய்ப்பை டயலொக் ஆசிஆட்டா மேலும் அதிகரித்துள்ளதுடன், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ ஊழியர்கள் மீதான அழுத்தத்தை குறைப்பதற்கும் அதேநேரத்தில் சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதற்குமான ஊக்கியாகவும் செயல்படும். இந்த முயற்சி நீர்கொழும்பு மாவட்டம் - பொது மருத்துவமனையில் புதிய முழுமையான செயற்பாட்டுடன் கூடிய ICU வளாகத்தை ஆரம்பித்துவைத்தது.

ஹேமாகம அடிப்படை மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் வைத்தியர் ஜனித ஹெட்டியாராச்சி கருத்து தெரிவிக்கையில், முழுமையாக செயற்படும் ICU இல்லாமையானது, 2 ICU படுக்கை மற்றும் நோயாளிகளின் அதிகரிப்பு ஆகியவை கோவிட் - 19 தொற்று நோய்க்கு சிகிச்சையிப்பதற்கான சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட போது ஹேமாகம அடிப்படை மருத்துவமனைபாரிய தடைகளை எதிர் நோக்கியது. டயலொக்கின் பங்களிப்புக்கு நாங்கள் என்றும்; நன்றியுள்ளவர்களாக இருப்போம்.  நீண்டகாலமாக, ஒருமுழுமையானசெயல்பாட்டுடன் கூடிய ICU இனை நிறுவுவது கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன் மட்டுப்படுத்தப்படாமல் மேலும் நாம் அதிக நோயாளிகளை அனுமதிப்பதற்கும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்பினை வழங்கியுள்ளது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமைநிர்வாக அதிகாரி சுபுன்வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமையில் ICU மேம்பாடு நிறைவடைந்ததையடுத்து, ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் ஒரு முழுமையான செயற்பாட்டுடன் கூடிய ICU இனை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை டயலொக் ஆரம்பித்துள்ளது. இந்த முயற்சிகளை மேற்கொள்வதற்கும், அடுத்தவாரங்களில் ஒருமுழுமையான ICU ஐ நிறுவுவதற்கும் எங்கள் அணிகள் சுகாதார அமைச்சுடன் இணைந்து அயராது செயற்பட்டு வருகின்றது'என தெரிவித்தார்.