இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள செய்தி

Saturday, 01 August 2020 - 19:50

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் தமது தொழிலை இழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அந்த பணியகத்தின் பேச்சாளர் மங்கல ரன்தெனிய இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ளவர்கள் தாயகம் திரும்ப விரும்பும் பட்சத்தில், அவர்களுக்கு சகல விதமான உதவிகளையும் வழங்க பணியகம் தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதுவ அதிகாரிகள் அங்கு பணியாற்றும் இலங்கையர்களுக்கு மாற்று வேலைகளை தற்காலிகமாக வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கட்டார் அரசாங்கத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் மூலம், அங்கு வேலையை இழந்தவர்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தென் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, வேறு பல நாடுகளில், குறிப்பாக பாரசீக குடா நாட்டு அரச நிர்வாகங்களுடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பல்வேறு நாடுகளில் தற்போது உள்ள சுமார் 15 ஆயிரம் இலங்கையர்கள் நலன் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


திருகோணமலை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள்...!
Friday, 07 August 2020 - 2:18

திருகோணமலை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள்... Read More

அனைத்து மாவட்டங்களுக்குமான முழுமையான பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...!
Friday, 07 August 2020 - 2:05

2020 நாடாளுமன்ற தேர்தலுக்குரிய அனைத்து மாவட்டங்களுக்குமான... Read More

மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள்
Friday, 07 August 2020 - 2:00

மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது... Read More