தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் போராட்டம்..!

Sunday, 02 August 2020 - 8:19

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..%21
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை, இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபைக்குரியது என எழுத்துமூலமான வாக்குறுதி வழங்குமாறு கோரி, 23 துறைமுக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள சத்தியாகிரக போராட்டம் இன்று 5 வது நாளாகவும் தொடர்கின்றது.

இதன்காரணமாக துறைமுகத்தின் சகல நடவடிக்கைகளும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும் சத்தியாகிரக போராட்டத்தின் காரணமாக இதற்கு முன்னர் துறைமுகத்தின் பிரதான நுழைவாயில் தடைப்பட்டது.

இதனையடுத்து காவல்துறையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் தீர்பொன்றை அளித்தது.

இதற்கமைய துறைமுகத்தின் பிரதான வாயில் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பாடாத வகையில் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் அறிவித்தது.

நீதிமன்றம் உத்தரவு வழங்கியதன் பின்னர் துறைமுகத்தின் பிரதான நுழைவாயில் பகுதியிலிருந்து போட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் வெளியேறியுள்ளன.

எவ்வாறாயினும் தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்படுமென தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதேவேளை அவசியமற்ற முறையில் போராட்டத்தை முன்னெடுப்பதன் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் ஊடாக பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்து அது தோல்வியடைந்தால் மாத்திரமே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இன்று போராட்டத்தை ஆரம்பித்து பேச்சுவார்த்தைக்கு கோரியுள்ளனர்.

தேர்தல் சந்தர்ப்பத்தில் இவ்வாறான போராட்டங்கள் நடைபெறுகின்ற நிலையில் அதன் பின்னணியில் இயங்கும் சக்தி தொடர்பி;லும் ஆராய வேண்டிய தேவையுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.