கொரோனா தொற்றுடன் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித் ஷா..!

Monday, 03 August 2020 - 9:57

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%BE..%21
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில் தம்முடன் அண்மையில் தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அவர் கோரியுள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 தொற்றுறுதியான இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போது டெல்லியிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது உடல்நிலை சீராக காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தரப்பினர் அங்கு இருந்துள்ளனர்.

இந்தநிலையில் இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 54 ஆயிரத்து 735 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 853 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இதற்கமைய இந்தியாவில் இதுவரையில் 38 ஆயிரத்து 161 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு 18 லட்சத்து 4 ஆயிரத்து 702 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

எனினும் இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியான 11 லட்சத்து 87 ஆயிரத்து 228 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 82 லட்சத்து 38 ஆயிரதது 936 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் 6 லட்சத்து 92 ஆயிரத்து 872 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியான ஒரு கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 655 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.