தன்னை “கிழவி” என்று சொன்ன அஜித் ரசிகருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி

Monday, 03 August 2020 - 12:14

%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E2%80%9C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BF%E2%80%9D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF
தன்னை கிழவி என்று கூறிய அஜித் ரசிகர் ஒருவருக்கு தான் என்றால் தன்னை விட ஐந்து வயது அதிகமான அஜித் யார்? என்று கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் ரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கஸ்தூரியின் பழைய திரைப்பட பாடல் ஒன்றை பதிவு செய்து “இது நம்ம கஸ்தூரி கிழவி தானே, அந்த காலத்தில் சரியான ஃபிகரா” இருந்திருப்பா போல என்று பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி தான் கிழவி என்றால் தன்னை விட ஐந்து வயது அதிகமான அஜித் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இன்னொரு டுவிட்டில் ’அஜித் ஒரு ஜென்டில்மேன் என்றும், அவருடைய புகழுக்கு இழுக்கு ஏற்படும் வண்ணம் அவருடைய ரசிகர்கள் யாரும் பதிவு செய்ய வேண்டாம் என்றும், அவருடைய உண்மையான ரசிகர்கள் உண்மையில் பெருமைப்படத்தக்கவர்கள் அஜித் அவர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்

இருப்பினும் இந்த பதிவு காரணமாக அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.