அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு

Monday, 03 August 2020 - 13:59

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த யோசனையை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன.

அமெரிக்காவின் 59ஆவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதன் காரணமாக, எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை, தபால் மூல வாக்களிப்பின் ஊடாக நடத்த பல மாநிலங்கள் தீர்மானித்துள்ளன.

எனினும், குறித்த திட்டத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கடும் எதிர்ப்பை வௌியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி திட்டமிட்டவாறு இடம்பெறும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.