கொரோனா காரணமாக பாதிப்பை எதிர்நோக்கும் சுற்றுலாத் துறை..!

Monday, 03 August 2020 - 13:37

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88..%21
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரிதும் பாதிப்புக்கு உள்ளான துறைகளில் சுற்றுலாத் துறையும் ஒன்றாகும்.

குறிப்பாக கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தரும் மாதங்களாக இருந்தாலும் இம்முறை கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கான வருகையை இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்திருந்தன.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாததன் காரணமாக தாங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா வாகனச் சாரதிகள் வேதனை வெளியிட்டுள்ளனர். மேலும் பொருளாதார ரீதியாக தாம் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.