அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளருக்கு போட்டி அபராதம்

Monday, 03 August 2020 - 13:50

%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில்க்கு சர்வதேச கிரிக்கட் பேரவை அபராதம் விதித்து தீர்மானித்துள்ளது.

கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற இங்கிலாந்துடனான போட்டியின் போது துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஜோனி பெயார்ஸ்டோக்கிடம் தவறான முறையில் வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டமைக்காகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜோஷ் லிட்டிலுக்கு அபராதம் விதிப்பதற்கும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கான அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ளவும் சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி நாளைய தினம் சவுதெம்ப்டனில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.