ஓகஸ்ட் 14ஆம் திகதி மாஸ்டர் திரைப்படம் வெளியீடா..? ஓடிடி நிறுவனத்தின் போஸ்டரால் பரபரப்பு

Tuesday, 04 August 2020 - 18:10

%E0%AE%93%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+14%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE..%3F+%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால், இதை படக்குழுவினர் மறுத்தனர். மேலும் திரையரங்குகள் திறந்தவுடன் முதல் படமாக விஜய்யின் மாஸ்டரை திரையிட திட்டம் இருப்பதாக கூறியிருந்தனர்.

ஆனால், தற்போது மாஸ்டர் திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் போஸ்டர் ஒன்று பரவி வருகிறது. இதுகுறித்து ஆராய்ந்தால், மாஸ்டர் என்னும் கொரியன் திரைப்படம் 2016ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

அந்த படத்தின் மோஷன் போஸ்டர்தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.