மீண்டும் இணைய உள்ள விஜய்-அட்லி கூட்டணி....!

Wednesday, 05 August 2020 - 11:55

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF....%21
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ கடந்த 2013-ம் ஆண்டு வெளியான 'ராஜா ராணி' எனும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதனைத்தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி சேர்ந்த அட்லீ, 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகிக்கிறார்.

இந்நிலையில், அட்லீ மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ளதாக சினிமா வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

இந்த ஊரடங்கு சமயத்தில் விஜய்யிடம் அட்லீ சுருக்கமாக கதை சொன்னதாகவும், விஜய்க்கு அது பிடித்துப்போனதால் அதனை முழு ஸ்கிரிப்டாக ரெடி பண்ணுமாறு அட்லீயிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

விஜய்யின் 65-வது படத்தை முருகதாசும், 66-வது படத்தை வெற்றிமாறனும் இயக்க உள்ளதாக கூறப்படும் நிலையில்இ இந்த இரு படங்களுக்கு பிறகு விஜய் அட்லீயுடன் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.