காலி மாவட்டம் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வசம்

Thursday, 06 August 2020 - 17:08

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
காலி மாவட்டத்திற்கான இறுதித் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி 430,334 வாக்குகளை பெற்று காலி மாவட்டத்தில் வெற்றியீட்டியுள்ளது. இது மொத்த வாக்குகளில் 70.54 சதவீதமாகும்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி 115,456 வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை தேசிய மக்கள் சக்தி 29,963 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியானது 18,968 வாக்குகளைப் பெற்று காலி மாவட்டத்தில் 3.11 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.