தோல்வியடைந்த வேட்பாளர்கள் ..

Friday, 07 August 2020 - 21:51

%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+..
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட்ட 12 பிரபல உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தோல்வியடைந்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக இம்முறை 6 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர். இருப்பினும் ஏ.எச்.எம் பௌசி, ஹிருணிகா பிரேமச்சந்ர மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரை இம்முறை கொழும்பு மாவட்ட மக்கள் புறக்கணித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, உததலைவர் ரவி கருணாநாயக்க, பொது செயலாளர் அக்கில விராஜ் காரியவசம் தேசிய அமைப்பாளர் நவின் திசாநாயக்க தயா கமகே ஆகியோர் தெரிவு செய்யப்படாமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இம்முறை கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துலிப் விஜேசேர , றுவன் விஜேவர்தன மற்றும் அரஜூன ரணத்துங்க ஆகியோர் தெரிவு செய்யப்படவில்லை. 

அஜித் மான்னப்பெரும விஜித் விஜேமுனி சொய்சா சத்துர சேனாரத்ன எட்வட் குணசேக்கர ஆகியோர் தெரிவு செய்யப்படவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அஜித் மானப்பெரும, சத்துர சேனாரத்ன, விஜித் விஜயமுனி சொயிசா, எட்வர்ட் குணசேகர ஆகியோர் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறை மாவட்டத்தில் அஜித் பி பெரேரா பாலித தெவரபெரும ஆகியோர் தெரிவு செய்யப்படவில்லை.

மாத்தறை மாவட்த்தில் பொது ஜன பெரமுனயில் போட்டியிட்ட லக்ஷ்மன் யாபா தெரிவு செய்யப்படாமை குறிப்பிடத்தக்கது.

காலி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்ப்பில் போட்டியிட்ட வஜிர அபேவர்தன ஐக்கிய மக்கள் சக்தி சார்ப்பாக போட்டியிட்ட விஜேபால ஹெட்டியாரச்சி பந்துலாள் பண்டாரகொட பியசேன கமகே தெரிவு செய்யப்படாமை குறிப்பிடத்தக்கது.

குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் போட்டியிட்ட கட்சி பொது செயலாளர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவு செய்யப்படவில்லை.

பொதுஜன பெரமுன சார்ப்பாக போட்டியிட்ட தாரனான் பஸ்நாயக்க டி பி ஏக்கநாயக்க இந்திக்க பண்டார ஆகியோர் தெரிவு செய்யப்படவில்லை.

புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட ரங்கே பண்டார, யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவை சேனாதிராஜா பீ சரவணபவன் மற்றும் விஜயகால ஆகியோர் தெரிவு செய்யப்படவில்லை.