10 கோடி தடுப்பூசியினை தம்மால் உற்பத்தி செய்ய முடியும்

Friday, 07 August 2020 - 21:31

10+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
கொரோனா வைரஸ் தொற்றுக்கான 10 கோடி தடுப்பூசியினை தம்மால் உற்பத்தி செய்ய முடியும் என இந்திய 'சேரும்' அமைப்பு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தம்மால் உற்பத்தி செய்யப்படும் இந்த ஊசி இந்தியா உட்பட 92 பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி உற்பத்திக்காக 15 கோடி அமெரிக்க டொலர்கள் நிதி அமைப்பொன்றிடம் இருந்து பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஒன்றினை 3 அமெரிக்க டொலருக்கு வழங்க முடியும்.

அதேவேளை, இந்தியாவில் நாளாந்தம் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த தொற்றுக்கு உள்ளான நாடுகளில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.