சல்மான் தன்னை கொன்று தனது குழந்தைகளை கடத்த முயற்சி

Friday, 07 August 2020 - 21:46

%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் மொகமட் பின் சல்மான் தன்னை கொன்று தனது குழந்தைகளை கடத்த முயற்சித்ததாக சவுதி அரேபியாவின் முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தம்மையும், அமெரிக்க புலனாய்வு அதிகாரி ஒருவருக்கும் எதிராக அவர் செயல்பட்டதாக தெரிவித்துள்ள அவர் இது தொடர்பாக அமெரிக்க நிதிமன்றம் ஒன்றில் வழக்கு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

முடிக்குரிய இளவரசர் நீதிக்கு புறம்பான முறையில் செயல்பட்டு பதவியினை ஏற்றமை தொடர்பான ரகசியம் தமக்கு தெரியவந்ததனை அடுத்தே அவர் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் புலனாய்வு அதிகாரி தற்போது அரசியல் அடைக்கலம் பெற்ற நிலையில் கனடாவில் உள்ள போதிலும், முடிக்குரிய இளவரசர் அமெரிக்காவின் உதவியுடன், தம்மை கொல்ல முனைவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

100 பக்கங்களுக்கும் மேற்பட்ட முறைப்பாட்டில் சகல விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் தாம் தங்கியுள்ள இடத்தை கண்டறிவதில் முடிக்குரிய இளவரசர் பல விதத்தில் முயற்சியினை மேற்கொண்டுள்ளதாகவும், முன்னாள் புலனாய்வு அதிகாரி கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.