கடற்தொழில் தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்..!

Sunday, 09 August 2020 - 20:32

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..%21
கடற்தொழில் தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கடற்தொழில் தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.

வெளிநாட்டு கடற்தொழிலாளர்கள் பாரிய இழுவைப் படகுகளின் ஊடாக எமது கடற்வளங்களை எடுத்துச் செல்வதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையை போக்குவதற்கு தற்போது அமுலில் உள்ள சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம் என
குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய சட்டங்களுக்கு அமைய வெளிநாட்டு கடற்தொழிலாளர்கள் எமது கடல்பிராந்தியத்தினுள் இலகுவாக நுழைந்து தொழில் செய்ய முடியும் என அகில இலங்கை கடற்தொழிலாளர் தொழிற்சங்கத்தின் தலைவர் அருண ரொஷாந்த பர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

கடற்தொழில் தரப்பினர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு கணிசமான அளவு பங்களிப்பை வழங்குவதை கவனத்திற் கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.