சிங்கப்பூரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

Monday, 10 August 2020 - 11:24

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%21
சிங்கப்பூரில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் அங்கு 175 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிங்கப்பூரின் அதிக சன நெரிசலான பகுதிகளில் தொடர்ந்தும் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

இதன்காரணமாக அவர்களை அடையாளம் கண்டு தொடர்ந்தும் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வைரஸ் காரணமாக சிங்கப்பூரில் 27 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 26 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் 7 லட்சத்து 34 ஆயிரத்து 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியான ஒரு கோடியே 29 லட்சத்து 661 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.