ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான ஐ.தே.கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Monday, 10 August 2020 - 13:53

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%90.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ராஜாங்க அமைச்சர்களான அஜித் பி பெரேரா, ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகினர்.

இன்று முற்பகல் 10 மணியளவில் அவர்கள் அங்கு முன்னிலையானதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

வட மேல் கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் டீ.கே.பீ.தஸநாயக்கவினால் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கே அவர்கள் இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.

2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான சாட்சியம் வழங்கி தமக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக அறிவித்து அவரால் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள ரஞ்சித் மத்தும பண்டார, ராஜித சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க, அஜித் பி பெரேரா, டீ.எம்.சுவாமிநாதன், ஜே.சீ.வெலிஅமுன மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ரவி வைத்தியலங்கார ஆகியோரை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.