புதிதாக பதவியேற்கும் இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான விபரங்கள்

Wednesday, 12 August 2020 - 9:52

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இன்று 39 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

01. உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக ச்சமல் ராஜபக்ஷ சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

02.நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக அஜித் நிவாட் கப்ரால் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

03. சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ஷெஹான் சேமசிங்க சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

04. தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் கிராமியச் சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக விதுர விக்ரமநாயக்க சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

05. நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராக நாலக கொடகஹோ சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

05. கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட் கைத்தொழில் ராஜாங்க அமைச்சராக இந்திக அநுருத்த சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

06. தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ,ராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

07. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு, ராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளை பதவி பிரமாணம் செய்து கொண்டார்

08. பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக தாரக பாலசூரிய சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

09. மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சராக சரத் வீரசேகர சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

10. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பியல் நிஷாந்த டி சில்வா சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

11. திறன்கள் அபிவிருத்தி, தொழிற் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப ராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

12. அறநெறிப் பாடசாலைகள், பிக்குமார் கல்வி, பிரிவெனாக்கள் மற்றும் பௌத்த பல்கலைக்கழகங்கள் இராஜாங்க அமைச்சராக விஜித பேருகொட சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

13. ஒளடத உற்பத்திகள், வழங்குகைள் மற்றும் ஒழுங்குறுத்துகை ராஜாங்க அமைச்சராக சன்ன ஜயசுமன சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

14. சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூகச் சுகாதார ராஜாங்க அமைச்சராக சிசிர ஜயகொடி சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

15. வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் ராஜாங்க அமைச்சராக ப்ரியங்கர ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

16. வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் ராஜாங்க அமைச்சராக விமலவீர திசாநாயக்க பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

17. நெல் மற்றும் தானியவகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாட்டு, விதை உற்பத்தி மற்றும் உயர்தொழில்நுட்ப ராஜாங்க அமைச்சராக சசீந்ர ராஜபக்ஷ சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

18. உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள், ரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை ஒழுங்குறுத்துகை ராஜாங்க அமைச்சராக மொஹான் டி சில்வா சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

19. கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

20. மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புகள் பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக சிறிபால கம்லத் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்

21. கிராமிய வயல்நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக அநுராத ஜயரத்ன பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

22. காணி முகாமைத்துவ அலுவல்கள் மற்றும் அரச தொழில்முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக ரொசான் ரணசிங்க சத்திய பிரமாணம் செய்து கொண்டார்

23. அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால்களை வளர்த்தல், கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

24. கம்பனித் தோட்டங்களைச் சீர்திருத்துதல், தேயிலைத் தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கைகள் மற்றும் தேயிலைத் தொழில்சாலைகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாட்டு ராஜாங்க அமைச்சராக கனக ஹேரத் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

25. தென்னை, கித்துல், பனை மற்றும் றப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அதுசார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் ராஜாங்க அமைச்சராக அருந்திக பெர்ணான்டோ சத்திய பிரமாணம் செய்து கொண்டார்

26. கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு ராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

27. கிராமிய மற்றும் பிரதேச நீர்க் கருத்திட்ட அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக சனத் நிஷாந்த சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

28. சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட ராஜாங்க அமைச்சராக துமிந்த திசாநாயக்க சத்திய பிரமாணம் செய்து செய்து கொண்டார்.

29. களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ஜயந்த சமவீர சத்திய பிரமாணம் செய்து கொண்டார்;.

30. கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சராக நிமல் லன்சா சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

31. வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில், ராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

32. கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சராக தேனுக விதானகமகே சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

33. விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக டி.வி. சானக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

33. பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி ராஜாங்க அமைச்சராக தயாசிறி ஜயசேகர சத்திய பிரமாணம் செய்து கொண்டார்

34. இரத்தினக்கல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள்சார்ந்த கைத்தொழில் ராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

35. பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப்பொருட்கள் மற்றும் கிராமியக் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பிரசன்ன ரணவீர சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

36. தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.