உப ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ்

Wednesday, 12 August 2020 - 13:46

%E0%AE%89%E0%AE%AA+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D
அமெரிக்க ஜனநாயக கட்சியின் உப ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிசை நியமித்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ஜோபிடன் அறிவித்துள்ளார்.

உப ஜனாதிபதி பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் கருப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் கமலா ஹாரிஸ் ஆவார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மூன்றாம் திகதி நடைபெறவுள்ளது.

குடியரசுக் கட்சியின் சார்பாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடன் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், 55 வயதுடைய கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் உப ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை சேர்ந்தவர் என்பதுடன், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவராவார்.