ரணில், சம்பந்தன், மங்கள, ஹக்கீம் உள்ளிட்ட சிலருக்கு விசாரணைகளுக்காக அழைப்பு

Wednesday, 12 August 2020 - 16:41

%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2C+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%2C+%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%2C+%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ, முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, பாட்டளி சம்பிக்க ரணவக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா, அநுரகுமார திசாநாயக்க, ஆர்.சம்பந்தன் ஆகியோரை எதிர்வரும் 21 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான வைத்தியர் நிஹால் ஜயதிலக்க முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

திவிநெகும, திணைக்களமாக மாற்றம் பெற்ற போது தன்னிச்சையாக விலகிய சேவையாளர்களுக்கு நட்டயீடு மற்றும் முற்பணம் வழங்கிய சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக அவர் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.