பருத்தித்துறை கடற்பரப்பில் இருந்து 275 கிலோ கேரள கஞ்சா மீட்பு

Wednesday, 12 August 2020 - 17:03

%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+275+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பருத்தித்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்டிருந்த 275 கிலோ கிராமிற்கும் அதிகளவான கேரள கஞ்சா போதைப்பொருட்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சா தொகை நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்த சோதனை நடவடிக்கையின் பொதியிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த கேரள கஞ்சாவை கொண்டுவந்த படகு மற்றும் மோசடியாளர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.