புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

Wednesday, 12 August 2020 - 17:08

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பொதுத் தேர்தல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகாத வேட்பாளர்களது சொத்து மற்றும் பொறுப்புக்கள் விபரத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆறாம் திகதி அல்லது அதற்கு முன்னர் தெரிவத்தாட்சி அதிகாரி ஊடாக அல்லது நேரடியாக கையளிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு தெரிவான அல்லது தெரிவு செய்து அனுப்பபடும் உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் கையளிக்கப்பட வேண்டும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி இதுவரை சொத்து விபரங்களை கையளிக்காத உறுப்பினர்கள் நாடாளுமன்ற ஆசனத்தில் அமர்வதற்கு முன்னர் அது தொடர்பான ஆவணங்களை கையளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சொத்து மற்றும் விபரங்கள் சட்டத்தின் கட்டளைகளை மீறுபவர்கள் தொடர்பில் கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழுவில் அறிக்கையிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.