கொரோனா தொடர்பில் தவறான தகவல்களின் காரணமாக 800 பேர் பலி

Thursday, 13 August 2020 - 7:06

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+800+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
கொரோனா வைரஸூடன் தொடர்புடைய தவறான தகவல்களின் காரணமாக உலகம் முழுவதிலும் இந்த ஆண்டு முதல் மூன்று மாத காலப்பகுதியில் சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வுகளில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

American Journal of Tropical Medicine and Hygiene வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தவறான தகவல்களின் காரணமாக சுமார் 5 ஆயிரத்து 800 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெத்தனோல் அல்லது மதுசாரம் அடங்கிய தூய்மைப்படுத்தும் திரவியங்களை பருகியதனால் உயிரிழந்துள்ளனர்.

இந்த தயாரிப்புகள் வைரஸூக்கு மருந்தாகும் என அவர்கள் நம்பியதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.