விஜய் ரசிகர் ஒருவர் திடீர் மரணம்...! காரணம் இதுதான்

Friday, 14 August 2020 - 18:31

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D...%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வரும் ஒரு பெயர் பாலா.

தீவிர விஜய் ரசிகரான பாலா இன்று காலை தற்கொலை செய்து கொண்டமை தற்சமயம் பெரிதும் பேசப்படும் ஒரு விடயமாக மாறியுள்ளது.

இந்தியாவின் சென்னை மாவட்டத்தை சேர்ந்த பாலா என்ற நபர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், தான் மாஸ்டர் படத்தை பார்க்காமல் உயிரிழக்க போவதை நினைத்து கவலை கொள்வதாகவும் தனது தலைவன் விஜய்யை பார்க்காமல் போவதும் கவலைக்குறிய விடயம் எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விடயம் தொடர்பில் அறிந்த நடிகர் விஜய் உடனடியாக தொலைபேசி வாயிலாக பாலாவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.