5 வருடங்களுக்கு பிறகு “தனி ஒருவன் 2” குறித்து வெளியான தகவல்

Saturday, 29 August 2020 - 18:12

5+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81+%E2%80%9C%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+2%E2%80%9D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
ஜெயம் ரவி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.

'ஜெயம்' படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான ராஜா தொடர்ச்சியாக ரீமேக்
படங்களையே இயக்கி, ரீமேக் ராஜா என்ற பெயரை பெற்றார். ஆனால் அந்த கேலிகளை உடைத்து முன்னணி இயக்குனராக அவர் தன்னை மாற்றிக்கொண்டது தனி ஒருவன் படத்தின் மூலம்தான். ஜெயம்ரவியின் சினிமா வாழ்க்கையிலும் அந்தப் படம் முக்கியமானதொரு படமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த படம் இப்போது வெளியாகி 5 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் அந்த படத்தில் நடித்திருந்த ஹரிஷ் உத்தமன் இது குறித்து தனது வாழ்த்துகளை இயக்குனர் மோகன் ராஜாவுக்கு தெரிவித்திருந்தார்.

அவருக்கு பதிலளித்த இயக்குனர் மோகன் ராஜா ‘தனி ஒருவன் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி,… விரைவில் தனி ஒருவன் 2 வரும்’ எனத் தெரிவித்துள்ளார்.