ஜனாதிபதியின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு

Tuesday, 08 September 2020 - 7:51

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இரத்தினபுரி தெமுவாவத்தையில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள இரத்தினக்கல் விற்பனை சந்தைத்தொகுதி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தின் பணிகளை உடனடியாக நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார் கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினக்கல் பரவலாக உள்ள பிரதேசங்களில் அனுமதி இன்றி இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் பாரியளவில் இடம்பெற்று வருகின்றன.

இயந்திரங்களை பயன்படுத்தி சுற்றாடலைப் பாதிக்கும் வகையில் இடம்பெற்று வருகின்ற இரத்தினக்கல் அகழ்வுகளை உடனடியாக நிறுத்துவதற்கும் சம்பிரதாயமாக இரத்தினக்கல் அகழ்வுகளில்

ஈடுபட்டுள்ளவர்கள் முகங்கொடுத்து வருகின்ற தடைகளை நீக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் இரத்தினக்கல் ஆய்வு கூடத்தை சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்துதல் உட்பட இத்துறையின் மேம்பாட்டிற்கான பல கருத்துக்கள் இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.