2021 இல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும் - ஜப்பான் திட்டவட்டம்..!

Tuesday, 08 September 2020 - 21:16

2021+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..%21

எவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியிலும், 2021 இல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது.

ஜப்பானின் ஒலிம்பிக் அமைச்சர் செய்கோ ஹஸிமோடோ ளுநமைழ ர்யளாiஅழவழ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜப்பானில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, கொவிட்-19 தொற்று காரணமாக பிற்போடப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதிவரை அதனை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அனைவரும் தயார் நிலைகளுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதாகவும், விளையாட்டு வீரர்களும் கணிசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் ஜப்பான் ஒலிம்பிக் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கொவிட்-19 தொற்று நிலைமையுடனோ அல்லது இல்லாமலோ ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் குழு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது