அவுஸ்ரேலிய அணி 19 ஓட்டங்களால் வெற்றி..!

Saturday, 12 September 2020 - 7:39

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+19+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF..%21
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 294 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அந்த அணியின் கிளேன் மெக்ஷ்வேல் 77  ஓட்டங்களையும் மிட்ஷல் மார்ஷ்  73 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர்  மற்றும் மார்க் ஹூட் ஆகியோர் தலா 3 விக்கட்களை வீழ்த்தினர்.

தொடர்ந்து 295 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 275 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் அந்த அணியின் சாம் பில்லிங்ஸ்  118 ஓட்டங்களையும் ஜோனி போர்ஸ்டவ்  84 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் அவுஸ்ரேலியா அணியின் அடம் ஷாம்ப்பா  4 விக்கட்களை வீழ்த்தினார்.