சாம்பியன் பட்டம் பெற்றார் நவோமி ஒசாகா..!

Sunday, 13 September 2020 - 9:18

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE..%21
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜப்பானை சேர்ந்த 22 வயதுடைய நவோமி ஒசாகா  சாம்பியன் பட்டம் பெற்றார்.

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா, பெலாரஸை சேர்ந்த அஸ்ரென்காவை  எதிர்கொண்டார்.

முதல் செட்டை 6 க்கு 1 என அஸெரென்கா எளிதில் கைப்பற்றினார்.

எனினும், நவோமி ஒசாகா 2ஆவது செட்டை 6 க்கு 3 என்ற அடிப்படையில் கைப்பற்றினார்.

இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்கும் 3 ஆவது செட்டிலும் நவோமி ஒசாகா, 6 க்கு 3 எனக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன் மூலம் நவோமி ஒசாகா தனது மூன்றாவது க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.