இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை....!

Sunday, 13 September 2020 - 13:55

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88....%21
இந்திய மத்திய அமைச்சர் அமித் ஷா, நேற்று இரவு 11 மணியளவில் மீண்டும் புதுடெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகரான 55 வயதான அமைச்சர் அமித் ஷாவுக்கு, அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைகளின் பின்னர் அவர் குணமடைந்தார்.

இந்த நிலையில், மீண்டும் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய நாடாளுமன்றம் நாளை மழைகால கூட்டத்தொடரை ஆரம்பிக்கின்றது.

நாளைய அமர்வில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடுமையான கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள 785 உறுப்பினர்களில், 200 பேர் 65 வயதிற்கும் மேற்பட்டவர்கள்.

இது வரை, 7 அமைச்சர்களுக்கும், 24 உறுப்பினர்களுக்கும் தொற்றுறுதியான நிலையில், அவர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், இந்தியாவில் 94 ஆயிரத்து 372 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 47 இலட்சத்து 54 ஆயிரத்து 356 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 114 பேர் கொவிட்-19 காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, இந்தியாவில் கொவிட்-19 காரணமாக பதிவான உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.