அவுஸ்திரேலியாவில் கொரோனா சட்ட விதிகளை மீறிய 74 பேர் கைது

Sunday, 13 September 2020 - 17:41

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+74+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 176 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலின் அமைச்சர் ஒருவர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மத வழிபாடுகளுக்கு விடுமுறை வழங்குவதை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டின் வீடமைப்பு அமைச்சர் யாகொச் லிட்ஸ்மன் என்பவரே இவ்வாறு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.