40 நாட்களாக சிறிய படகில் நிர்கதியாகி இருந்த ஏதிலிகள் இத்தாலியில் தரையிறக்கம்

Sunday, 13 September 2020 - 19:27

40+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
மத்திய தரைகடலில் 40 நாட்களாக சிறிய படகில் நிர்கதியாகி இருந்த ஏதிலிகள் இத்தாலியில் தரையிறக்கப்பட்டுள்ளனர்.

கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட 27 பேர் ஏதிலிகள் குழு கடந்த ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி லிபியாவில் இருந்து வெளியேறியிருந்தனர்.

சுமார் 40 நாட்களாக அவர்கள் வேறு நாடுகளுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் அவர்களை இத்தாலியில் தரையிறக்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

அவர்கள் பயணித்த படகு மூழ்க ஆரம்பித்ததை அடுத்து அவர்கள் இத்தாலிக்கு சொத்தமான கப்பலொன்றில் ஏற்றப்பட்டு சிசிலி பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் அவர்களை ஏற்றிய கப்பல் ஒரு மாதத்திற்கும் அதிக காலங்கள் வெளிநாடுகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனம் ஒன்றினால் குறித்த ஏதிலிகள் மீட்கப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.