வலுப்பெற்று வரும் பெலருஸ் நாட்டு ஜனாதிபதிக்கு எதிரான போராட்டங்கள்

Monday, 14 September 2020 - 7:22

%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பெலருஸில் அந்த நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

அந்த நாட்டு தலைநகரில் நேற்றைய தினம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலை அடுத்து 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பெலருஸ் காவல்துறையினர் நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் என்பன நடத்தியுள்ளனர்.

பெலருஸில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன் எதிர்கட்சியின் பல உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெலருஸ் ஜனாதிபதிக்கு எதிராக கடந்த 5 வாரங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.