தங்கை மீது பாசம் வைத்த பெற்றோர்- 11 மாத குழந்தையை கொன்ற 5 வயது சிறுமி

Monday, 14 September 2020 - 11:59

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-+11+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+5+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF
ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் இருக்கும்போது ஒருவருக்கு அதிகப் பாசமும் மற்றவருக்கு குறைவாக அளவு பசமோ கொடுத்தால் பின்விளைவுகள் ஏற்படும் என்படுத்தும் என பலரும் கூறுவதுண்டு. அதுபோல் ஒரு சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்காசனம் என்ற பகுதியில் காவியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் நிர்மலா (5 வயது) இளைய மகள் ஹேமஸ்ரீ 11 மாதக் குழந்தை.

இந்நிலையில் பெற்றோர் வீட்டில் எப்போதும் இளைய மகள் மீது அதிகம் பாசம் வைத்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் மூத்த மகள் கடுங் கோபம் அடைந்துள்ளார். இந்நிலையில் ஹேமஸ்ரீயை காவியா பக்கத்து வீட்டில் உறக்க வைத்துள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கு சென்று பார்த்த போது, குழந்தையைக் காணவில்லை. எல்லா இடங்களிலும் தேடியும் பாரத்துள்ளார் ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.

இதனையடுத்து அருகில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் குழந்தை பிணமாக மிதந்துள்ளது. இதைக் கண்ட பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டபோது நிர்மலாவிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர்.

அதற்கு அவள் தன்னைவிட சகோதரி மீது பெற்றோர் அதிகம் பாசம் காட்டியதன் காரணமாக கிணற்றில் போட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுமி மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.