ஆளும் கட்சியின் புதிய தலைவராக யோஷிஹிட் சுகா தெரிவு..!

Monday, 14 September 2020 - 14:24

%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81..%21
ஜப்பானின் ஆளும் கட்சியின் புதிய தலைவராக யோஷிஹயிட் சுகா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானிய ஆளும் கட்சியான லிபரல் ஜனநாயக கட்சியின் மொத்த 534 வாக்குகளில் 377 வாக்குகளை பெற்றதன் மூலம் அவர் கட்சியின் தலைவர் பொறுப்பினை ஏற்றுள்ளார்.

ஜப்பானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் கட்சியின் தலைமைத்துவத்திற்காக போட்டியிட்ட பொழுதிலும் தோல்வியடைந்துள்ளனர்.

இதற்கு அமைய யோஷிஹயிட் சுகாவே புதிய பிரதமராக தெரிவு செய்யப்படுவது உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலம் காரணமாக தாம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்திருந்தார்.

தற்போது ஜப்பானிய அமைச்சரவையின் தலைமை செயலாளராக பணியாற்றும் 71 வயதான யோஷிஹயிட் சுகா பிரதமர் ஷின்சோ அபேக்கு மிகவும் நெருக்கமாக செயல்பட்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய பிரதமராக பதவி ஏற்றதன் பின்னர் ஜப்பானின் கொள்கை அடிப்படையில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜப்பானிய நாடாளுமன்றம் புதிய பிரதமரை உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யும் அமர்வு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.