பேச்சுவார்த்தையின் போதே தாக்குதல்கள்...!

Monday, 14 September 2020 - 20:17

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%87+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
ஆப்கானிஸ்தானிய அரசாங்கமும் தாலிபான்களுக்கும் இடையேயான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தாலிபான்களின் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த குந்தூஸ் பிரதேசத்தில் தாக்குதல் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க ராஜாங்க செயலர் மைக் பொம்பியோவின் தலையீட்டுடன் கட்டாரில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மாத இறுதியில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் தாக்குதல்கள் மேற்கொள்ள வேண்டாம் என காணொளியின் ஊடாக தாலிபான்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி சில மணி நேரத்தின் பின்னர் தாலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தானிய அரச படைகளுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

பெரிய அளவிலான மோதல்கள் குண்டூஸ் பிரதேசத்தில் உள்ள நெடுஞ்சாலையிலேயே இடம்பெற்றுள்ளன.

ஆப்கானிஸ்தான் அரச கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த பிரதேசத்தை குறிவைத்து தாலிபான்கள் தாக்கியுள்ளனர்.

அரச படையினர் வான் மற்றும் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம் திட்டமிட்ட முறையிலான தாக்குதல் எதனையும் மேற்கொள்வதில்லை என தெரிவித்துள்ள தாலிபான்கள் அரச படையினர் தாக்குதலை மேற்கொள்ளும் போதே தற்காப்பு ரீதியாக பதில் தாக்குதலை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வருட ஆரம்பம் முதல் பெரிய நகரங்கள் எதனையும் தாக்கும் திட்டத்தை கொண்டிருக்கவில்லை என தாலிபான்களின் பேச்சாளர் சபிஹூல்லா முஜாஹிட் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபான்களுக்கு இடையே இடம்பெற்றுவரும் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு குந்தகம் ஏற்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே தாம் தொடர்ந்தும் செயல்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த 19 வருடங்களாக நடைபெறும் யுத்தம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.