நிபந்தனைகளுக்கு அமைய நடைபெறவுள்ள போட்டி..!

Monday, 14 September 2020 - 20:37

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF..%21
சுற்றுலா நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய மகளீர் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் சில நிபந்தனைகளுக்கு அமைய நடைபெறவுள்ளன.

பிரிஸ்பேனில் உள்ள அலன் போடர் விளையாட்டு திடலில் மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களுடன் போட்டிகள் நடைபெறவுள்ளன.

குறித்த போட்டிகளின் போது பார்வையாளர்கள் ஆரவார நடவடிக்கைகளை இயன்ற அளவு குறைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் முதன் முறையாக இந்த மாத இறுதியில் பார்வையாளர்களுடன் கிரிக்கட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இருபதற்கு இருபது மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான அனுமதி சீட்டின் எண்ணிக்கை குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கட் அறிவித்துள்ளது.

குவீன்ஸ்லண்ட் அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைய 50 சத வீதமான பார்வையாளர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது