டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறிய நவோமி ஒசாகா

Tuesday, 15 September 2020 - 7:10

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+3%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE
உலக டென்னிஸ் தரவரிசையில் அமெரிக்க ஓபன் தொடரில் பட்டத்தை வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6 இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடரின் முடிவை தொடர்ந்து புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.

இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

அதேநேரம், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லி பார்ட்டி முதலாவது இடத்தினையும் பெற்றுள்ளார்.

அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6 இடங்கள் முன்னேறி 3 வது இடத்தை பிடித்துள்ளார்.

அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட செரீனா வில்லியம்ஸ் ஒரு இடம் பின்தங்கி 9 வது இடத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.