வெள்ளத்தில் மூழ்கிய ஜாக்கிசான்– படப்பிடிப்பில் பரபரப்பு (நேரடிக் காணொளி)

Tuesday, 15 September 2020 - 14:55

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E2%80%93+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%28%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
பிரபல ஹாலிவுட் ஆக்‌ஷன் நடிகரான ஜாக்கிசான் படப்பிடிப்பின் போது வெள்ளத்தில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜாக்கிசான் வேன்கார்ட் என்ற ஹாலிவுட் ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சி ஒன்று சீனாவில் படமாக்கப்பட்டு வருகிறது.

மியா முகி என்ற நடிகையுடன் நீரில் செல்லும் பைக்கில் பயணிக்கும் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது ஜாக்கிசான் ஓட்டிய தண்ணீர் பைக் குப்புற கவிழ்ந்ததால் இருவரும் நீரில் மூழ்கினார்.

சில வினாடிகளில் மியா முகி வெளியே வந்து விட்டார். ஆனால் கிட்டத்தட்ட நீரில் மூழ்கி 1 நிமிடத்திற்கும் மேலாக ஜாக்கிசான் வெளியே வராததால் உடனடியாக அவரது பாதுகாவலர்கள் மற்றொரு படகில் சென்று அவரை மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் படப்பிடிப்பு குழுவினரை மட்டுமல்லாது ஜாக்கிசான் ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.