அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- மூவர் பலி

Wednesday, 16 September 2020 - 9:52

%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
இரத்தினபுரி - அவிசாவளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகினர்.

திவுரும்பிட்டி பகுதியில், பாரவூர்தி ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த 48, 53, 57 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியில் புஸ்செல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயணிகள் பேருந்து ஒன்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.