ஐவர் அடங்கிய குழு நியமனம்...!

Wednesday, 16 September 2020 - 15:54

%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D...%21
இலங்கை மருத்துவ சபையின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால் 5 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து அமைச்சருக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சில வெளிநாட்டு பல்கலைக்கழங்களின் பதிவினை மருத்துவ சபை இரத்து செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அது தொடர்பிலும் ஏனைய முறைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்வதற்காக குறித்து குழு நியமிக்கப்பட்டுள்ளது.