சீ வி விக்கினேஷ்வரனுக்கு எதிரான வழக்கை நிறைவுறுத்த தீர்மானம்...!

Wednesday, 16 September 2020 - 19:18

%E0%AE%9A%E0%AF%80+%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D...%21
நீதிமன்றை அவமதித்துள்ளதாக குற்றம்சாட்டி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நிறைவுறுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

குறித்த வழக்கு, மகிந்த சமயவர்தன மற்றும் ப்ரியந்த பெர்னாண்டோ ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் முன்னாள் கடற்றொழில் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட பாலசுப்ரமணியம் டெனீஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய பிரதிவாதி செயற்படாமையால் நீதிமன்றை அவமதித்துள்ளதாக கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, குறித்த மேன்முறையீட்டை மீளப்பெறுவதற்கு தமது சேவையாளர் இணக்கம் வெளியிட்டுள்ளதால் வழக்கை தொடர்ந்து முன்கொண்டு செல்ல எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் மேன்முறையீட்டு நீதிமன்றில் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமது சேவையாளருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக அவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீளப்பெற தயாராகவுள்ளதாக பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் அறிவித்துள்ளார்.

இதற்கமைய மனுதாரர் மற்றும் பிரதிவாதிகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நிதிமன்ற நீதியரசர்கள் ஆயம் வழக்கினை நிறைவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.