தீயை கட்டுப்படுத்த ஏற்பட்ட செலவினத்தை கோரும் அரசாங்கம்...!

Wednesday, 16 September 2020 - 18:11

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...%21
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.டி. நியு டயமண்ட் கப்பலின் உரிமையாளரிடம், இடைக்கால கொடுப்பனவாக 340 மில்லியன் ரூபாய் கோரப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கோரிக்கை பத்திரத்தை சட்ட மா அதிபர், குறித்த கப்பலின் உரிமையாளரின் சட்டத்தரணிகளிடம் சமர்ப்பித்துள்ளார்.

இரண்டு தடவைகள் தீப்பற்றலுக்கு உள்ளான இந்த கப்பலின் தீயைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கான கட்டணங்களாக இந்த தொகை கோரப்படுகிறது.

இதற்கிடையில் இந்த கப்பலில் இருந்து கடலில் கசிந்துள்ள எண்ணெய் குறித்து ஆய்வினை நடத்திய கடல்பாதுகாப்பு அதிகாரசபை, அந்த கசிவு கன எரிபொருள் எண்ணெய் என்று அடையாளம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.