சர்வதேச ரீதியில் 03 கோடியை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

Thursday, 17 September 2020 - 6:35

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+03+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..%21
சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் சுமார் 3 இலட்சம் பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, தந்போதுவரை உலகளவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 15 ஆயிரத்து 547 ஆக உயர்வடைந்துள்ளது.

கொவிட்-19 தாக்கத்தினால், அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள முதல் நான்கு நாடுகளான அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் மற்றும் ரஷ்யாவில் ஒரு கோடியே 70 இலட்சம் பேரளவில் தொற்றுறுதியாகியுள்ளனர்.

அமெரிக்காவில் 67 இலட்சத்து 88 ஆயிரத்து 147 பேருக்கும், இந்தியாவில் 50 இலட்சத்து 18 ஆயிரத்து 34 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

பிரேஸிலில் 43 இலட்சத்து 84 ஆயிரத்து 299 பேருக்கும், ரஷ்யாவில் 10 இலட்சத்து 73 ஆயிரத்து 849 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

இதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் சர்வதேச ரீதியில் சுமார் 6 ஆயிரம் கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றில் சுமார் 3 ஆயிரத்து 500 மரணங்கள் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் முதலான மூன்று நாடுகளில் பதிவாகியுள்ளன.

எவ்வாறிருப்பினும், சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 17 இலட்சத்து 69 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.